world

img

கிரீஸ் – அகதிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, 30 பேர் மாயம்  

கிரீஸ் நாட்டில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் கடலில் மாயமாகியுள்ளனர்.    

துருக்கியில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக கிரீஸ் நாட்டிற்குள் செல்வதற்கு 30-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மூலம் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது கிரீஸ் நாட்டின் ஃப்லிகிராண்ட்ரோஸ் தீவுக்கூட்டம் அருகே சண்டரோணி தீவு பகுதியில் வந்த படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் வந்த அனைவரும் கடலில் மூழ்கியுள்ளனர். சுமார் 112 மைல் தொலைவில் படகு மூழ்கிய பின்னர் புதன்கிழமை அதிகாலை, விபத்து குறித்து தகவலறிந்து வந்த கிரீஸ் கடற்படையினர் அகதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  

இந்த விபத்தில் சிக்கி கடலில் மூழ்கியபடி உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அகதிகள் 12 பேரை கடற்படையினர் மீட்டனர். மீட்கப்பட்ட 12 பேரில் பெரும்பாலானோர் ஈராக் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களை அருகிலுள்ள சண்டரோணி தீவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகு கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 30 பேர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  அதனை தொடர்ந்து கடலில் மூழ்கி மாயமான அகதிகளை தேடும் பணியில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டதில், அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.                     

;